(இராஜதுரை ஹஷான்)

புகையிரத தொழிற்சங்கத்தினரது பிரச்சினைகள் உட்பட அனைத்து அரச ஊழியர்களின் வேதன பிரச்சினைகளுக்கு இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறிய அமைச்சர்,

தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கும் போது அரசாங்கம்   எடுக்கின்ற தீர்மானங்களை சிலர் தவறான முறையில் பாவித்து அரசாங்கத்தினை பலவீனப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாகவும் இது  போன்ற விடயங்கள் கடந்த புகையிரத தொழிற்சங்க போராட்டம்,   தனியார் பேருந்து சங்க போராட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.

மேலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்நியா முன்வந்தபோது  அரசாங்கம்  அதனை மறுத்துவிட்டது. 1250 மில்லியன்  நிதியில் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய  தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.