(ரொபட் அன்டனி)

மாகாணசபைத் தேர்தலை ஜனவரி மாதம்  நடத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால்  சரியாக அந்தத் தினத்தில் தேர்தலை  நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.  எப்படியிருப்பினும் தற்போதைய 50க்கு 50 என்ற தேர்தல் முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இதனை தெரிவித்த அமைச்சர்,

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே  தினத்தில் நடத்தவே விரும்புகின்றோம்.   அரசாங்கம்  தேர்தலை தாமதப்படுத்துகின்றது என்றால்  அதற்கு கூட்டு எதிரணியும் ஆதரவு வழங்கியே அரசாங்கத்துடன் இணைந்து எல்லை நிர்ணய  அறிக்கையை தோற்கடித்தது என்றார்.