(ரொபட்  அன்டனி)

கலஹா வைத்தியசாலை விவகாரம்  தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றேன். விசாரணைகள் ஏற்கனவே  தொடங்கிவிட்டன என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்கத்தில் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு   கருத்து வெளியிடுகையிலேயே இதனைக் குறிப்பிட்ட அவர் விசேட அதிரடிப்படையினரிடம் பாதுகாப்பை  உறுதிப்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.