பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகளில் பெரும்பாலானவை தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதனால் பாடப் புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகளில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் அரச அச்சகங்கள் உள்ள போதிலும் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன்,

கேள்வி மனுவை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாரெனினும் உரிய தரத்தில் பாடசாலை புத்தகங்களை அச்சிடாத நிறுவனங்களின் தயாரிப்புக்கள் நிராகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.