முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணரட்ணவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியுமென்றால் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு தினைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நேவி சம்பத் தலைமறைவாகியிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதியும் முப்படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ண பணம் வழங்கினார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மன்றில் இன்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிவான், முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ணவிற்கு எதிரான  குறிறச்சாட்டுக்களை நிரூபிக்க முடியுமென்றால் அவரை கைது செய்யுங்கள் என உத்தரவிட்டார்.