மத்திய மாகாண சுற்றுலா அமைச்சின் எண்ணக்கருவுக்கமைய மலைநாட்டு சுற்றுலா நவவோதயம் என்ற தொனிப்பொருளில் ஹட்டன் புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள  சுற்றுலா  வசதிகள் மையம் இன்று காலை 9.00 மணியளவில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

 மலைநாட்டு பகுதிக்கு வரும் சுற்றுலா பிரயாணிகள் எண்ணிக்கையினை அதிகரிக்கும் நோக்கிலும் புகையிரதங்களுடாக வரும் வெளிநாட்டு பிரயாணிகளுக்கு வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் குறித்த சுற்றுலா வசதிகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 குறித்த சுற்றுலா வசதிகள் மையம் திறப்பு விழாவின் போது வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் விசேட அம்சமாகும்.

 குறித்த நிகழ்வுக்கு ஹட்டன் புகையிரத நிலையத்தின் அதிகாரிகள், ஹட்டன், அம்பகமுவ, நோர்வூட், கொட்டகலை ஆகிய நகர மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங் பொன்னையா உட்பட அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 இதற்காக மத்திய சுற்றுலா அமைச்சு 4.2 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.