பூநகரியில் வெடிமருந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் பூநகரி சோதனை சாவடியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது வாகனம் ஒன்றிலிருந்து 1 கிலோ 80 கிரேம் நிறையுடைய வெடி மருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த வெடிமருந்து கடத்தல் தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதோடு. குறித்த இருவரும் தேராவில் மற்றும் வலைப்பாடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.