சட்டவிரோதமான முறையில் தங்க சங்கிலியை சிங்கப்பூலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை  பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  அக்கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான வியாபாரியே என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நபர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

குறித்த நபரின் நடடிவக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது  சுமார் 28 இலட்சம் பெறுமதியான தங்கசங்கிலியை அவரிடமிருந்து மீட்டுள்ளனர். 

குறித்த வியாபாரி கொண்டு வந்த தங்க சங்கிலியை மேலதிக பரிசோதனைக்காக கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.