தசம புள்ளியை தவறாக புரிந்து கொண்டமையின் காரணமாக தொழிலாளர் ஒருவர் 100 மடங்கு சம்பளத்தை அதிகமாக பெற்ற சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

 

தசம புள்ளியை தவறாக புரிந்துகொண்டதால், அவுஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்திலுள்ள தொலைத்தூர கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவருக்கு 4,921.76 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு பதிலாக 4,92,176 அவுஸ்திரேலிய டெலார்கள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

இது இவரின் வழமையான சம்பளத் தொகையினை விட 100 மடங்கு அதிகமாகும்.

குறித்த இந்த சம்பவமானது பணியாளர் ஒருவரின் தவறின் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த பிராந்தியத்தின் தலைமை அதிகாரி, பணத்தை தவறுதலாக பெற்ற தொழிலாளி தொலைத்தூர கிராமத்தில் வசித்து வந்ததால், ஒருவாரம் கழித்து அவர் அந்த பணத்தை மீள் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.