கலந்துரையாடலின் போது கல்வி சாரா ஊழியர்களது 21 கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்காவிட்டால் கடும் தொழிற் சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக கல்வித் துறயைச்சேர்ந்த கல்விசார ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.

குறித்த களந்துரையாடல் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்று கண்டி டெவன் விருந்தகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அச் சங்கத்தின் பிரதம செயலாளர் அஜித் கே. திலகரத்ன இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துதெரிவித்த அவர்,

கல்வித் துறையின் அபிவிருத்திக்கும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்கும் கல்வித்துறையிலுள்ள கல்வி சாரா ஊழியர்கள் பாரிய பங்களிப்புக்ளைச் செய்து வருகின்றனர். இருந்தபோதும் கல்வித்துறையில் கல்வி சாரா ஊழியர்களது பிரச்சினைகளுக்கு இது வரை சாதகமான எவ்வித தீர்வுகளும் கிடைக்கவில்லை

இது வரை நாங்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் பெற்றுக்கொண்ட சில உரிமைளைக் கூட எங்களிடம் இருந்து படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகின்றது. ஒரே பாடசாலையில் மூன்று வருடங்களுக்கு மேல் சேவைசெய்த ஊழியர்களது பிள்ளைகளை அப் பாடசாலைக்கு சேர்ந்துக்கொள்வதற்கு வழங்கப்படிருந்த உரிரை 201ஆ5 ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டுள்ளது. 

இது நாங்கள் இது வரை பெற்றிருந்த உரிமையை பறிப்பதாகும். அதேபோன்று கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 1500 ரூபா கொடுப்பணவு அதே பாடசாலையில் சேவை செய்யும் கல்வி சார ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை, 

அதி கஷ்டப் பிரதேச பாடசாலையில் சேவைசெய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 2500 ரூபா கொடுப்பணவும் அதே பாடசாலையில் சேவை செய்யும் கல்விசாரா ஊழியர்களுக்க வழங்கப்படுவதில்லை. இவ்வாறு கல்வி அமைச்சு எப்போதும் எமக்கு பாராபட்சம் காட்டி வருகின்றது.

2015 ஆம் ஆண்டு முதல் நாங்கள் அமைச்சருடன் முறையான கலந்துரையாடல் ஒன்றுக்கு முன் வந்தபோதும் அது எதிர்வரும் 31 திகதிக்கே அச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது நாங்கள் முன் வைத்துள்ள 21 கோரிக்கைகளுக்கும் நியாமான தீர்வு கிடைக்கா விட்டால் நாடலாவிய ரீதியில் கடும் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடு பட உள்ளதாகவும் அவர் திவித்தார்..