அமெரிக்காவின் மேற்கு பசுபிக் கடலில் உள்ள மரியானா தீவில் இன்று 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நில  நடுக்கம் ஏற்பட்டதனால் அப் பகுதி மக்கள் அதிர்வுகளை உணர்ந்துள்ளதாகவும் இதனால் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்களில் இருப்பிடத்தை விடுத்து வெளியேறியுமுள்ளனர்.

எனினும் இந்த நில நடுக்கத்தின் காரமணாக சுனாமி எச்சரிக்கை எவையும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.