சில்லறை கடையில் தீ விபத்து

Published By: Digital Desk 4

29 Aug, 2018 | 09:24 AM
image

நானுஓயா டெஸ்போட் பகுதியில் அமைந்துள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நானுஓயா பொலிஸார், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடையில் சமையல் எரிவாயு (கேஸ் சிலின்டர்) இருந்ததனால் இத்தீ வேகமாக பரவியுள்ளதோடு, தீ விபத்தினால் அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31