(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

மெய்வல்லுநர் போட்டிகளில் இறுதி எதிர்பார்ப்பாக இருந்த 800 மீற்றர் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிலும் கலந்து கொண்ட இலங்கை வீரர்கள் இருவரும் இலங்கைக்கான பதக்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி தோல்வியடைந்துள்ளனர்.

ஆசிய விளையாட்டு விழாவின் 800 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான போட்டியில் இலங்கை வீரர் இந்துனில் ஹேரத் பந்தயத் தூரத்தை 1.51.36 செக்கன்களில் நிறைவுசெய்து கடைசி இடம்பெற்று ஏமாற்றினார். 

தகுதிச் சுற்றில் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித் இந்துனில் இறுதிப்போட்டியில் பின்தங்கி விட்டமை கவலைக்குரியது. இதில் தங்கபபதக்தக்தை இந்தியாவின் முஞ்சித் சிங் வென்றார். இவர் பந்தயத் தூரத்தை 1.46.15 செக்கன்களில் அடைந்தார்.

அதேபோல் பெண்களுக்கான போட்டியிலும் இலங்கை வீராங்கனை கயந்திகா துஸாரி ஆறாவது இடத்தைப் பிடித்து ஏமாற்றினார். இவர் பந்தயத் தூரத்தை 2.05.50 செக்ன்களில் கடந்தார். 

இந்தப் போட்டியில் சீன வீராங்கனை சுன்யூ 2.01.80 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப்பதக்கத்தை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.