கண்டி, கலஹா வைத்தியசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்ககளை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

கண்டி, கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென உயிரிழந்ததனால், அப் பகுதி பொது மக்கள் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால் கண்டி கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

இந் நிலைமை மோசமாகவே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.