(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

போகத் குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டங்கல் திரைப்படத்தின் நிஜ நாயகியான வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு விழாவில் மல்யுத்தில் தங்கப்பதக்கம் வென்றார். 

இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்சந்த வினேஷ் போகத் நேற்று நாடு திரும்பியபோது டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பொது மக்கள் வரவேற்பளித்தனர். 

அத்தோடு அவரது காதலுரும் வினேஷ்ஷை வரவேற்க விமானநிலையம் வந்திருக்கிறார். அப்போத விமான நிலையத்தின் வாசலில் வினேஷ் போகர் - சோம் வீரர் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடத்துந்து. இருவரும் மொதிரம் மாற்றிக்கொண்டுள்ளனர். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஆர்பறிக்க கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பறிமாறிக்கொண்டனர்.