(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஆசிய விளையாட்டு விழாவின் ஹொக்கிப் போட்டியில் 'ஏ' பிரிவில் இலங்கை அணி தான் சந்தித்த நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற்றிருந்த நிலையில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 20-0 என்ற கோல்கள் அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்று இலங்கையின் வாய்ப்பைத் தட்டிப் பறித்தது.

ஆசிய விளையாட்டு விழாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு ஹொங்கொங் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்ற இலங்கை தான் ஆடிய நான்காவது போட்டியில், இந்தோனேஷியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. 

இந்நிலையில் பெரும் எதிர்பார்க்கு மத்தியில் பலம்பொருந்திய அணியான இந்தியாவை இன்று எதிர்த்தாடிய இலங்கை அணி 20-0 என்ற கோல்கள் அடிப்படையில் படுதோல்வியை சந்தித்தித்துள்ளது.