(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஆசிய விளையாட்டு விழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதக்கப்பட்டியிலில் சீனாவே தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. அத்தோடு கட்டார் பஹ்ரைன் போன்ற நாடுகளில் தடகளப் போட்டிகளில் கலந்துகொண்ட பெரும்பாலான வீர வீராங்கனைகள் ஆபிரிக்க நாட்டை பிறப்பிடிமாகக் கொண்டவர்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. 

ஆக இது ஆபிரிக்க போட்டிகளா ஆசியப் போட்டிகளா என்று எண்ணும் அளவிற்கு ஆபிரிக்க வீரர்களின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது.

ஆசிய விளையாட்டு விழாவில் 200 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இலங்கையின் ஓட்ட வீராங்கனை ருமேஷிகா ரத்நாயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் முந்தைய வேகத்தையே அடைய முடியாமல் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

தகுதிச் சுற்றில் போட்டியிட்ட ருமேஷிகா பந்தையத் தூரத்தை 23.79 செக்கன்களில் ஓடிமுடித்தார். இதனையடுத்து அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி நேற்று 5.20 மணிக்கு நடைபெற்றது. ஆசிய விளையாட்டு விழாவின் 200 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் சிறந்த வேகத்திற்கான சாதனைகளுக்கு இன்றும் சொந்தக்காரராக இருப்பவர் இலங்கை வீராங்கனை தமயந்தி தர்ஷாதான். அது 1998 ஆம் ஆண்டு பெங்கொக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவின்போது பந்தயத் தூரத்தை 22.48 செக்கன்களில் ஓடிமுடித்து இந்த சாதனையை நிகழ்த்தனார். 

இந்த அரையிறுதியில் முதலிரண்டு இடங்களுக்குள் வந்துவிட்டால் இறுதுதிப்போட்டிக்கு தகுதிபெறலாம் என்ற நிலையில் ஓடிய ருமேஷிகா 24.16 செக்கன்களில் பந்தயத் தூரத்தை நிறைவுசெய்து ஆறாமிடம் பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார். தகுதிச் சுற்றில் 23.79 செக்கன்களில் ஓடிய ருமேஷியா அரையிறுதியில் 24.16 செக்கன்கள் என வேகம் குறைந்தது ஏனோ என்று தெரியவில்லை. 

அரையிறுதியில் இந்தியாவின் சாந்த் டுட்டு பந்தயத் தூரத்தை 23.00 செக்கன்களின் கடந்து முதலிடத்தைப்பிடித்தார். இரண்டமிடத்தை பஹ்ரைன் வீராங்கனை வென்றமை குறிப்பிடத்தக்கது.