(எம்.மனோசித்ரா)

கொழும்பில் 600 கிலோ மீற்றர் வீதிகளில் பழைய நீர் குழாய்கள் மாற்றப்பட்டு புதிய நீர் குழாய்கள் பொறுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதா கொழும்பு மாநாகர சபை மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

கொழும்பு வாழ் மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை உறுத்திப்படுத்தும் நோக்கிலேயே இத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர் எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் இவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.