பிலபல நகைச்சுவை நடிகர் கலாபவன் மணி மரணம் : திரையுலகம் அதிர்ச்சி

Published By: Robert

07 Mar, 2016 | 11:23 AM
image

Kalabhavan Mani

பிரபல மலையாள திரைப்பட நடிகரும், தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவருமான கலாபவன் மணி தனது 45 வயதில் மரணம் அடைந்தார். 

கொச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான கோளாறுகள் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்ற இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

இந்தத் தகவல் மலையாள திரையுலகில் பரவத் தொடங்கியதும், பலரும் நம்ப முடியாமல் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். 

மம்முட்டி, பிருத்விராஜ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் பகிர்ந்தனர். 

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

ஆட்டோ டிரைவராக இருந்து, பின்னர் மிமிக்ரி கலைஞராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய கலாபவன் மணி, தென்னிந்திய சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்கள் மூலம் முத்திரைப் பதித்தவர். 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

அக்‌ஷரம் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனாலும், திலீப் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற சல்லாபம் என்ற படத்தில் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததன் மூலம் முக்கிய நடிகராக கவனம் பெற்றார்.

'வாசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' என்ற படத்துக்காக 1999 ல் சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை வென்றார். அதே படத்துக்காக 2000 ல் சிறப்பு ஜூரி பிரிவில் தேசிய விருதைப் பெற்றார்.

தமிழில் 'ஜெமினி' படம் மூலம் கவனத்தை ஈர்த்த கலாபவன் மணி, சமீபத்தில் வெளிவந்த கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

மனைவி நிம்மி, மகள் வாசந்தி லக்‌ஷ்மி உடன் கலாபவன் மணி வாழ்ந்து வந்தார். கலாபவன் மணியின் பெயருக்கு முன்னால் உள்ள கலாபவன் என்பது, கழுத்தையும் உடலையும் வளைத்துப் பலவிதமாக மிமிக்ரி செய்ய அவருக்குக் கற்றுக்கொடுத்த கலைப் பாடசாலையின் பெயராகும். இது கொச்சியில் அமைந்துள்ளது.

சாலகுடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மணி, கலாபவன் மணியாக மாறி தென்னிந்திய சினிமாவில் அறியப்பட்ட முகமாக, கலாபவன் கலைப்பள்ளிதான் காரணம். தன்னை கலைஞனாக்கிய பாடசாலையின் பெயரையே தன் பெயருக்கு அடையாளமாக மாற்றினார். 

மிருகங்களின் குரல்களை மிமிக்ரி செய்வது கலாபவன் மணியின் சிறப்பு. ‘ஜெமினி’ படத்தில் அவர் பாம்பையும், பல்லியையும் மிமிக்ரி செய்து காண்பித்ததை மறந்திருக்க மாட்டோம்.

அவரது இறுதிச்சடங்கு கேரளாவில் இன்று நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35