கடந்த ஒரு வார காலமாக அவுஸ்திரேலியாவில் அரங்கேறிய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஸ்கொட் மொறிசன் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டும் சில அமைச்சர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டும் உள்ளது.

அந்த வகையில் முன்னாள் அமைச்சரின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரிஸ்பையினே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர் ட்ரன்புல்லின் ஆதரவாளர் கிரிஸ்டோபர் பைன் புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகவும்  மூத்த அமைச்சர்களில் ஒருவரான செனட்டர் மத்தியாஸ் கொர்மன் நிதியமைச்சராகவும் பதவியேற்றனர்.

புதிய அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்ட பிரிட்ஜட் மெக்கென்ஸி பிராந்திய ஃசெவைகள் விளையாட்டு உள்ளூராட்சி மற்றும் பன்முகப்படுத்தல் அமைச்சராகவும் மொலிஸ்ஸா பிரய்ஸ் சுற்றாடல் துறை அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

டேவிட் கொல்மேனுக்கு குடிவரவுத்துறை பிரஜாவுரிமை மற்றும் பல் பண்பாட்டலுவல்கள் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.