தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, விடுதலை சிறுத்தைகள் சந்தித்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறார்.இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் உள்ளது. 

பெங்களூரூவில் கொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர் அவர்கள் மூலம் ரவிக்குமாரும் கொலை பட்டியலில் இருப்பதாக மத்திய உளவு துறை மாநில உளவுத்துறைக்கு தெரிவித்துள்ளது. 

எனவே ரவிக்குமாருக்கு மாநில அரசு தகுந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. 

இதனால் மாணவர்களின் உயர் கல்வி பயில்வது பாதிக்கப்பட்டுள்ளது எனவே தமிழக அரசு இந்த மாணவர்களுக்கு முழு உதவித் தொகையை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க என்னுடைய பிறந்த நாளையொட்டி வனப்பகுதிகளில் பனை விதைகளை நடும் இயக்கத்தை தொடங்கினேன். 

இதுவரை மூன்று லட்சம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன.தமிழக அரசு ஒரு கோடி பனைவிதைகளை நடுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். 

ஆகிய இந்த மூன்று கோரிக்கைகளை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறேன்.’ என்றார்.