நாளை பிரதமர் விஷேட உரை

Published By: Robert

07 Mar, 2016 | 10:24 AM
image

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை செவ்வாய்க்கிழமை கூடும் பாரா­ளு­மன்ற அமர்வில் நாட்டின் பொரு­ளா­தார நிலை தொடர்­பாக விசேட உரை­யொன்றை நிகழ்த்­த­வுள்ளார்.

அத்­துடன் காணாமல் போனோர் மற்றும் தமிழ் அர­சியல்வாதிகள் தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணை­யொன்­றையும் முன்­வைக்­க­வுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தின் மார்ச் மாதத்­திற்­கான முத­லா­வது அமர்வு நாளை செவ்­வாய்க்­கி­ழமை 8ஆம் திகதி ஆரம்­ப­மாகி 11ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இச்­சபை அமர்வின் போது நாட்டின் தற்­போ­தைய பொரு­ளா­தார நிலை தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெளி­வு­ப­டுத்­து­மொரு விசேட உரை­யொன்றை ஆற்­ற­வுள்ளார்.

கடந்த பெப்­ர­வரி மாத பாரா­ளு­மன்ற அமர்வின் போது எதிர்க்­கட்­சி­யினர் எழுப்­பிய நாட்டின் பொரு­ளா­தார நிலைமை தொடர்­பான கேள்­வி­க­ளுக்கு இன்­றைய அமர்வில் தெளி­வு­ப­டுத்­து­வ­தாக பிர­தமர் தெரி­வித்தார்.

அதற்­க­மை­யவே நாளைய தினம் பிர­தமர் விசேட உரை­யாற்­ற­வுள்ளார். அதே­வேளை சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணை­யொன்றை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இன்­றைய சபை அமர்வில் முன்­வைக்­கின்­றது.

காணாமல் போனோர் மற்றும் தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பா­கவே இச் சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்டு விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. அத்­தோடு தகவல் அறியும் சட்­ட­மூ­லத்­தையும் அர­சாங்கம் நாளை சபையில் முன்­வைக்­கின்­றது. ஆனால் அது தொடர்­பி­லான விவாதம் பிறி­தொரு தினத்தில் நடை­பெறும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை நாட்டின் தற்­போ­தைய பொரு­ளா­தார நிலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02