(எம்.மனோசித்ரா)

நேபாளத்தின் தலைநகர் காத் மண்டுவில் இடம்பெறவுள்ள வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை நேபாளம் செல்லவுள்ளார். 

இம் மாநாட்டில் நேபாளம், பங்களதேஷ் , பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். அத்துடன் இந்த மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.