இன்றைய காலகட்டத்தில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் போது சிலர் தங்களது வீட்டை பூட்டிவிட்டு அதனை ஒரு முறைக்கு இரு முறை சோதித்துப் பார்த்துவிட்டு பிறகே வெளியில் செல்வர். இது ஆரோக்கியமானது மற்றும் இயல்பானது.

சிலர் அலுவலகத்திற்கு செல்லும் போதும், சென்ற பிறகும் வீட்டை சரியாக பூட்டினோமா? இல்லையா? என்று எண்ணிக்கொண்டேயிருந்தால் அதற்கு பெயர் தான் Obesessive Compulsive Disorder  என்ற பாதிப்பு.

சில பெண்கள் தங்களது வீடுகளில் இரவு உறங்குவதற்கு முன் எரிவாயு இணைப்பை முழுவதுமாக நிறுத்தினோமா? இல்லையா? என்பதை இரவில் தூக்கத்திலிருந்து எழுந்தும் சரிபார்ப்பர். 

இத்தகைய மன நோயிற்கு மனதில் எழும் அதீத அச்ச உணர்வு தான் காரணம். அதாவது ஏதேனும் தவறாக நடந்துவிட்டால் மற்றவர்கள் தங்களை குற்றம் சுமத்திவிடுவார்களோ..? என்றும் தண்டனை கடுமையாக இருந்துவிடுமோ? என்ற அச்ச உணர்வு தான் இதற்கு காரணம்.

இதற்கு மன நல நிபுணர்களிடம் கட்டாயம் சிகிச்சைப் பெறவேண்டும். அவர்கள் நேர் மறையாக சிந்திப்பது குறித்தும், செய்யப்படும் செயல்கள் சரியாக இருக்கின்றனவா? என்பது குறித்த ஆய்வு எந்த எல்லை வரை செய்யவேண்டும் என்பதும் குறித்தும், அதற்கு பிறகு துணிந்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைப்பார்கள். அதன் பிறகு சமநிலையான எண்ணங்கள் மற்றும் செயல்கள் குறித்து விளக்கமளிப்பார்கள்.

வைத்தியர் ராஜ்மோகன்.

தொகுப்பு அனுஷா.