(ஆர். விதுஷா )

தொம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தித்தபத்தர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹங்வெல்ல - உறாபொல  வீதியூடா தித்தபத்தர பகுதியிலிருந்து பூகொடை பிரதேசம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று முன்னே பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதையடுத்து பேருந்தின் பின்  வந்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த  23 வயதுடைய தித்தபத்தர பகுதியை சேர்ந்த தொன் கோசல நிர்மலன்  எனும் மோட்டார் சைக்கிளின் சாரதி தொம்பே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து மற்றும் லொறி சாரதிகளை  கைதுசெய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.