வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பணிப்கிஷ்கரிப்பு காரணமாக ஒரு சில பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து மின்னேரிய தேசிய பூங்கா தற்காலிகமாக நேற்றிலிருந்து மூடப்பட்டது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் 3 வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதன் காரணமாக சுற்றுாலா பயணிகளுக்கு ஒரு சில இடங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்னேரியா, வஸ்கமுவ, கௌதுல்ல மற்றும் அங்கமெடில்ல ஆகிய பூங்காக்களுக்கு சுற்றுலாப்பயணிகள் சுற்றுலாவை மேற்கொள்ள இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  தாக்குதல் சம்பவததை கண்டித்து கொழும்பு - ஹபரணை வீதியை மறித்து சபாரி ஜீப் வண்டிகளின் சாரதிகள் தற்போது ஆர்ப்பாட்டத்திலீடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.