நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவான ஜானி படத்தின் டீஸர் வெளியாகி, பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.

அறிமுக இயக்குநர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் டொப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் தயாரான ஜானி படத்தின் டீஸரை இயக்குநர் மணிரத்னம் நேற்று வெளியிட்டார்.

இதன் போது படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன், நாயகன் பிரசாந்த், நாயகி சஞ்சிதா ஷெட்டி,  நடிகர் ஆனந்தராஜ், நடிகர் பிரபு, அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் பங்குபற்றினர்.

இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் தியாகராஜன் கருத்து தெரிவிக்கையில், இந்த படம் திரையுலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வரும் பட வெளியீடு, படத்தில் இடம்பெற்ற கிறாபிக்ஸ் பணிகள் போன்றவற்றின் காரணமாக வெளியாவதில் தாமதமானது. தற்போது படத்தினை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கிறோம். 

அவர்களும், தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இப்படத்தின் வெளியீட்டு திகதியை முடிவு செய்வார்கள். அதன் பிறகே இப்படம் வெளியாகும்.’ என்றார்.

நாயகன் பிரசாந்த் தெரிவிக்கையில்‘ இந்த படம் திரில்லர் பாணியில் தயாராகியிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே முதன் முதல் ஷார்க் என்ற ஹாரர் திரில்லர் பாணியை தொடங்கிவைத்தோம். 

பிறகு பொன்னர் சங்கர் என்று வரலாற்று பின்னணியிலான படங்களை தொடங்கிவைத்தோம். பின்னர் பாகுபலியாக வளர்ந்து உச்சம் கண்டது. தற்போது மீண்டும் திரில்லரில் புது வகையான விறுவிறு திரைக்கதையை உருவாக்கியிருககிறோம். இதுவும் எதிர்காலத்தில் ட்ரெண்ட்டாகும்.’ என்றார்.