உலகிலஅதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற கிளென் மெக்ராத்தின் சாதனையை முறியடிப்பதற்கு(563) இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனிற்கு  இன்னமும் ஏழு விக்கெட்கள் தேவைப்படுகின்றன.

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் அவர் இந்த சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன

இந்நிலையில் நான் அன்டர்சன் மீது அதிக மதிப்பு வைத்திருக்கின்றேன்,அவரிற்கு எனது நல்வாழ்த்துக்கள் அவர் எனது சாதனையை முறியடித்த பின்னர் அவரின் சாதனையை எவரும் முறியடிக்கமாட்டார்கள் என கருதுகின்றேன் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.

சாதனைகள் சிறப்பானவை நான் உலகில் எந்த வேகப்பந்து வீச்சாளரையும் விட அதிக விக்கெட்களை வீழ்த்தியமை குறித்து பெருமிதம் அடைகின்றேன் என மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சாதனைகள் என்பன முறியடிப்பதற்கானவை ஆனால் அன்டர்சன் எனது சாதனையை முறியடித்தால் நான் மகிழ்ச்சியடைவேன் எனவும் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

வேகபந்துவீச்சாளர்கள் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாகயிருந்தாலும் பரவாயில்லை அவர்கள் மத்தியில் ஐக்கியம் அவசியம் எனவும் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

அன்டர்சன் என்னை கடந்து சென்றதும் அவரின் இறுதி இலக்கு எதுவென பார்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள மெக்ராத் தற்போது கிரிக்கெட் விளையாடப்படும் முறை மற்றும் அதிகளவு ரி 20 போட்டிகள் விளையாடப்படுவதை கருத்தில் கொள்ளும் போது அன்டர்சனின் சாதனையை எந்த வேகப்பந்து வீச்சாளரும் முறியடிக்கமுடியாது என்றே கருதுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளராக விளங்குவதே கிரிக்கெட்டில் கடினமான விடயம், ஆடுகளத்திற்கு வெளியே நாங்கள் எவ்வளவு கடினமாக பாடுபடுகின்றோம் என்பதை யாரும் கருத்தில் எடுப்பதில்லை எனவும் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மிக கடினமாக பாடுபடுகின்றோம் பயிற்சி எடுக்கின்றோம் கடந்த 15 வருடகாலமாக அன்டர்சன் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுகின்றார் என்றால் அது அவரின் உடல் மற்றும் உளவலிமையை வெளிப்படுத்துகின்றது எனவும் மக்கிராத் தெரிவித்துள்ளார்.

எனது இறுதி தொடரில் அன்டர்சனுடன் விளையாடியதிலிருந்து அவர் ஒரு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என நான் தெரிவித்து வருகின்றேன், அவர் இரு பக்கமாகவும் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர் வேறு எவராலும் இது முடியாது வாசிம் அக்கிரத்தினால் மாத்திரம் அதனை செய்ய முடியும் எனவும் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.