இரண்டாம்  உலகப் போர் காலக்குண்­டொன்று  ஜேர்­ம­னிய  மான்­ஹெயிம் பிராந்­தி­யத்­தி­லுள்ள  லுட்விக் ஷேபன்  நகரில்  கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந்­ந­க­ரி­லி­ருந்து 18500  பேர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

அமெ­ரிக்கப் படை­யி­னரால் போடப்­பட்­டது என நம்­பப்­படும் மேற்­படி 500  கிலோ­கிராம் நிறை­யு­டைய  குண்டு  இந்த வார ஆரம்­பத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட நிர்­மாண நட­வ­டிக்­கை­யொன்றின் போது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் ஜேர்­ம­னிய   குண்டு செய­லி­ழக்க வைக்கும் பிரி­வினர் சுமார்  ஒரு மணி நேரம் போராடி மேற்­படி குண்டை  செய­லி­ழக்க வைத்­துள்­ளனர்.  இத­னை­ய­டுத்து  சுமார் 6  மணி நேரம் கழித்து நிலைமை வழ­மைக்குத் திரும்­பி­யுள்­ளது.

ஜேர்­ம­னியில்  இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அந்தப் போரில் பயன்­ப­டுத்­தப்­பட்ட குண்டு கார­ண­மாக  அதி­க­ள­வான மக்கள் இடம்­பெ­யர்ந்த நிகழ்வு  கடந்த வருடம்  பிராங்பூட் நகரில் இடம்­பெற்­றது.  மேற்­படி 1.8  தொன் நிறை­யு­டைய புளக்­பஸ்டர் என அழைக்­கப்­படும்  குண்டு கார­ண­மாக சுமார் 70,000  பேர் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தனர்.

அதே­ச­மயம் கடந்த ஏப்ரல் மாதம் பெர்லின் நகரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 500  கிலோ­கிராம்  நிறை­யு­டைய உலகப்போர் காலக்குண்டு கார­ண­மாக  அந்­த ந­க­ரி­லுள்ள பிர­தான புகை­யி­ரத நிலை­யத்­தி­லி­ருந்து பெருந்­தொ­கை­யான மக்கள்  வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­தனர்.