ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்­தி­லுள்ள 3 மது­பா­ன­சா­லை­க­ளையும் மூடி­வி­ட­வேண்டும் என ஆலை­ய­டி­வேம்பு மகளிர் கோரிக்கை விடுக்­க­வி­ருக்­கி­றார்கள். சர்­வ­தேச மகளிர் தின­மான 8ஆம் திகதி  இக்­கோ­ரிக்­கை­ய­டங்­கிய மக­ஜரை ஆலை­ய­டி­வேம்பு மக­ளிர்கள் பிர­தேச செய­ல­கத்­தி­லி­ருந்து காலை 8.45மணிக்கு ஆரம்­பித்து 9.30மணி­ய­ளவில் பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கு கைய­ளிக்­க­வுள்­ளனர்.

இதனை அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரிவின் சிவில்­பா­து­காப்­புக்­கு­ழுக்கள் ஏற்­பா­டு­செய்­துள்­ளன. ஜனா­தி­ப­திக்கு அன்று ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச செய­லாளர் மற்றும் உத­விப்­பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரூ­டாக அனுப்­பப்­ப­ட­வி­ருக்கும் மக­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது:

ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச பெண்­க­ளா­கிய நாம் இன்­றைய மக­ளிர்­தி­னத்தில் ஒரே­யொரு விண்­ணப்­பத்தை மாத்­திரம் விடுக்­கின்றோம். ஆலை­ய­டி­வேம்பில் இயங்கும் இம் 3 மது­பா­ன­சா­லை­களால் சமூக பொரு­ளா­தார மற்றும் கலா­சார ரீதி­யாக பல­வ­ழி­க­ளிலும் எமது சமுகம் சீர­ழிந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. 12 கார­ணங்­களை தங்­க­ளிடம் சமர்­ப்பிக்­கின்றோம்.

ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச செய­லாளர் மற்றும் உத­வி­ப்பொலிஸ் அத்­தி­யட்­ச­ரூ­டாக ஜனா­தி­ப­திக்கு அனுப்­பப்­ப­ட­வி­ருக்கும் இம்மகஜரின் பிரதிகள் கிழக்குமாகாண ஆளுநர் முதலமைச்சர் அம்பாறை அரசஅதிபர், மதுவரி ஆணையாளர் முதலியோருக்கு அனுப்பப்படவிருக்கின்றன என மகாசக்தி அசோகா தெரிவித்தார்.