"வடகிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவும்"

Published By: Vishnu

28 Aug, 2018 | 08:24 AM
image

வடக்கு – கிழக்­கில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மிகவும் முக்­கி­ய­மா­னது. உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த துரித நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஐ.தே.க.வின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரிவித்தார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று மாலை நடை­பெற்ற  வடக்கு – கிழக்கை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான  விசேட ஜனா­தி­பதி  செய­ல­ணியின்  கூட்­டத்தில்  கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான நட­வ­டிக்­கைகள் தாம­த­மாக இடம்­பெ­று­கின்­றன. வடக்கு – கிழக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் எவரும் இல்லை. இது தொடர்பில் ஜனா­தி­பதி கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் முன்னாள் போரா­ளி­க­ளுக்கு கல்விச் சான்­றிதழ் இல்­லா­மை­யினால் தொழில்­வாய்ப்­பைப் பெறு­வது நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளது. எனவே விசேட வர்த்­த­மா­னியினூடாக இவர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்­பு­களை வழங்க நட­வ­டிக்கை எடு­க்க வேண்டும். வடக்கு – கிழக்கில் கைத்­தொழில் பேட்­டை­களை உரு­வாக்­கு­வது அவ­சியம். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான வச­தி­களை செய்­து­கொ­டுக்க வேண்டும் என்றார். 

இதன்­போது கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி, வடக்கு – கிழக்கு பிர­தி­நி­தி­க­ளுக்கு அமைச்­ச­ரவை அமைச்சுப் பத­வி­களை வழங்க நான் தயா­ரா­கவே  இருக்­கின்றேன். நீங்கள் பெயர்­களைப் கூறுங்கள். நான் நிய­மிக்­கின்றேன் என்றார். 

இதன்­போது அமைச்சர் மனோ கணேசன், நான் ஏற்க­னவே பகி­ரங்­க­மாக அறி­விப்­பு­களை வெளி­யிட்­டமை ஜனா­தி­ப­திக்குத் தெரி­யுமா என்று கேட்டபோது, ஆம் எனக்கு தெரியும் என்று ஜனா­தி­பதி கூறி­னார்.

மனோ கணேசன் 

தொடர்ந்து அமைச்சர் மனோ கணேசன் குறிப்­பி­டு­கையில்,

நான் அடிக்­கடி வடக்கு – கிழக்கு சென்று வரு­கின்றேன். அப்­போது அங்கு அரச அலு­வ­ல­கங்­க­ளிலும் தொழில் முயற்­சி­க­ளிலும் வடக்கு – கிழக்கு தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு சந்­தர்ப்பம் கிடைக்­காமல் உள்­ள­மையைக் காண்­கின்றேன். வடக்கு – கிழக்கு சாரா­த­வர்­க­ளுக்கே தொழில்­வாய்ப்­புகள் கிடைக்­கின்­றன. இது தொட­ர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஒரு விசேட பொறி­முறை உரு­வாக்­கப்­பட்டு தொழில்­வாய்ப்­புகள் வழங்­கப்­பட வேண்டும் என்றார்.  இதன்­போது இந் நிலைமை குறித்து  கவனம் எடுப்­ப­தாக ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கின்றார்.

மாவை எம்.பி. 

தொடர்ந்து கருத்து வெளி­யிட்ட மாவை சேனா­தி­ராஜா எம்.பி, வடக்கு – கிழக்கு காணிப் பிரச்­சினை தொடர்பில் நான் உங்­க­ளுக்கு மயி­லிட்டி நிகழ்வின் போது எடுத்­து­ரைத்­தி­ருந்தேன். எமது மக்­களின் காணி விடு­விப்பு மிகவும் முக்­கி­ய­மாகும் என்று குறிப்­பிட்டார். 

இதன்­போது குறுக்­கிட்ட ஜனா­தி­பதி, பாட­சாலைக் காணி­களோ அல்­லது கட்­ட­டங்­களோ இரா­ணு­வத்­திடம் இருந்தால் அவற்றை உடன் விடு­விக்க வேண்­டும் என்ற நிலை­ப்பாட்டில் நான் உள்ளேன் என்றார். 

சுவா­மி­நாதன்

இச் சந்­தர்ப்­பத்தில் கருத்து வெளி­யிட்ட அமைச்சர் சுவா­மி­நாதன் குறிப்­பி­டு­கையில்,

கேப்­பா­ப்புலவு காணி விடு­விப்பில் நில­விய பிரச்­சி­னையைக் குறிப்­பிட வேண்டும். அந்தக் காணி­களில் இரா­ணு­வத்தின் கட்­ட­டங்­களை அமைத்­துள்­ளனர். எனவே அவர்கள் அந்தக் கட்­ட­டங்­க­ளுக்­கான நிதியைக் கேட்­கின்­றனர். நிதிப் பிரச்­சி­னையே இங்கு பிர­தா­ன­மாக உள்­ளது என்றார்.   இதன்­போது கருத்து வெளி­யிட்ட அமைச்சர் மனோ கணேசன், இங்கு நிதிதான் பிரச்­சினை என்றால் அது தொடர்பில் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்­கலாம் அல்­லவா? என்றார். அது குறித்து ஆரா­யலாம் என இதன்­போது ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.

இதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், சர­வ­ண­பவன், சிறி­யாணி விஜே­விக்­கி­ரம ஆகியோர் வடக்கு – கிழக்கில் போதைப்­பொருள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் கேரள கஞ்சா அதி­க­மாகக் கொண்டு வரப்­ப­டு­வ­தா­கவும் இது தொடர்பில் பொலி­ஸாரின் நட­வ­டிக்கை போது­மா­ன­தாக இல்லை என்றும் கூறி­யுள்­ளனர். 

இதன்­போது பொலிஸ் மா அதி­பரை பார்த்து கேள்­வி­யெ­ழுப்­பிய ஜனா­தி­பதி, இதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டார்.

பொலிஸ்மா அதிபர் 

அதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர, போதைப்­பொ­ருளை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றனர். இதற்கு இரா­ணு­வமும் கடற்­ப­டையும் உத­வு­கின்­றன. ஆனால் ஒரு சில நட­வ­டிக்­கை­களைக் கொண்டு இவர்கள் பொலிஸார் மீது குற்றம் சாட்­டு­கின்­றனர் என்று குறிப்­பிட்டார். இதன்­போது மீண்டும் கருத்து வெளி­யிட்ட சித்­தார்த்தன் எம்.பி. வடக்கின் வாள்­வெட்டு சம்­ப­வங்­க­ளுடன் பொலி­ஸாரின் தொடர்­புள்­ள­தாக மக்கள் சந்­தே­கிப்­ப­தாக குறிப்­பிட்டார்.

அதனைத் தொடர்ந்து கோடீஸ்வரன் எம்.பி. குறிப்பிடுகையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் மட்டுமே நீர்த் திட்டங்களை முன்னெடுப்பதாக குற்றம் சுமத்தினார். அமைச்சர் ஹக்கீம் தமிழ், சிங்கள பிரதேசங்களை மறந்து விட்டதாகக் குறிப் பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், நிதி போதாமை காரணமாகவே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட் டினார். 

மேலும்  கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி.     இவ்வாறான கூட்டங்களில் வாக்குறுதிகள்  மட்டுமே இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுப் பதில்லை  என்றும்  குற்றம் சாட்டினார்.  இதன்போது கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02