பச்சிப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பொதுக்கிணற்றை புனரமைப்பு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் (A-9) வீதியோரமாக உள்ள குறித்த பொதுக் கிணற்றினை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் குறித்த கிணற்றில் இருந்து நீர் தாங்கி (பவுசர்) ஊடாக நீரினை பெற்று அயல் பிரதேச மக்களும் நீரினை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் குறித்த கிணற்றின் கட்டுக்கள் நீண்ட காலமாக உடைந்து காணபடுகின்றது. அதனால் கட்டினை புனரமைத்து தருமாறு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களிடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.