(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

குத்துச்சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கையின் நட்சத்திர வீரர் இஷான் பண்டார தாய்லாந்து வீரர் டொங்டீயுடன் போட்டியிட்டார். 

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடினாலும் மூன்று முறை விதிகளை மீறி விளையாடினார் என்ற குற்றச்சாட்டில் நடுவரினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆகயைால் இந்தப் போட்டியில் தாய்லாந்து வீரர் வெற்றி பெற்றார்.

அதேபோல் பெண்கள் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் நட்சத்திய வீராங்கனை அனுஷா கொடிதுவக்கு ஜப்பானின் வாடா மொடொக்கை எதிர்த்தாடினார். இதில் அனுஷா 4-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவி ஏமாற்றினார்.