(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

இலங்கைக்கு இறுதி எதிர்பார்ப்பாக இருந்த கராட்டிப் போட்டியிலும் தினுஷா குமாரி மற்றும் ஜயகொடி கவிந்து ஆகியோர் இன்று தோல்வியைத் தழுவிக்கொண்டனர். 

இதில் முதலாவதாக நடைபெற்ற ஆண்களுக்கான 84 கிலோகிராம் எடைப் பிரிவில் சீன வீரர் மா செயூனை எதிர்த்து போட்டியிட்ட கவிந்து 0-2 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்ந்தார். 

அதன்பிறகு நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் கலந்துகொண்ட இலங்கை வீராங்கனை தினுஷாவை 8-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் இந்தோனேஷியாவின் சுருணிட்டா சாரி. 

இந்தப் போட்டியில் கடுமையாக தாக்கப்பட்ட இலங்கை வீராங்கனை தினுஷா போட்டிக் களத்திலேயே நிலைக்குலைந்து கீழே விழுந்தார். பின்னர் போட்டி நிறுத்தப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.

ஆனாலும் இந்தப் போட்டியில் தினுஷா காயமடைந்திருக்க அருகில் அணி வைத்தியரோ, அணியின் உடற்கூற்று நிருபரோ அருகில் இல்லை. இந்த போட்டி நடைபெறும்போது இலங்கை அணி வீரர்கள் வேறெந்த போட்டியிலும் கலந்துகொண்டிருக்கவில்லை. அதனால் இலங்கை அணி வைத்தியர் கராட்டி போட்டி களத்தில் நிருந்திருக்க வேண்டியது அவசியம். அவர் அங்கு இல்லாமல் போனது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.