(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஆசிய விளையாட்டு விழாவில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை கயந்திகா இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். 

ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியின் தகுதிச் சுற்றில் இலங்கையின் முன்னணி வீராங்கனைகளான நிமாலி லியனாரச்சி மற்றும் கயந்திகா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதில் முதலாவது தகுதிச்சுற்று ஓட்டத்தில் நிமாலி லியானரச்சி பந்தயத் தூரத்தை 2.06.74 செக்கன்களில் ஓடி முடித்து நான்காவது இடத்தப் பிடித்தார். இதில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற பாரைன் மற்றும் ஜப்பான் வீராங்கனைகள் இறுதிக்கு தகுதிபெற்றனர். மூன்றாவது வீராங்கனையாக கஸகஸ்தான் வீராங்கனை வாய்ப்பு பெற்றார். 

இதேபோட்டிப் பிரிவின் இரண்டாவது தகுதிச் சுற்று ஓட்டத்தில் மற்றொரு இலங்கை வீராங்கனையான கயந்திகா துஷாரி கலந்துகொண்டார். 

இதில் கயந்திகா பந்தத் தூரத்தை 2.06.31 செக்கன்களில் நிறைவுசெய்து மூன்றாவது இடத்தப் பெற்றார். ஆனாலும் வேக அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீராங்கனைகள் இறுதிக்கு தகுதிபெற்றனர். அதன்படி நாளை நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதியில் கயந்திகா கலமிறங்குகிறார்.