ஆசிய தேர்தல் சம்மேளனத்தின் நான்காவது மாநாடு இன்று அங்குரார்ப்பணம்

Published By: Vishnu

27 Aug, 2018 | 05:10 PM
image

தேர்தல்களை நடத்துகின்றபோது ஜனநாயகத்தின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக ஆசியாவிலும் அதற்கு வெளியிலும் செயற்பட்டு வரும் பங்காளர்களுக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் பொது உடன்பாட்டுன் கூடிய இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் ஆசிய தேர்தல் சம்மேளனத்தின் நான்காவது மாநாடு இன்று நடைபெற்றது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, பெபரல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாரச்சி, சுதந்திர ஊடக அமைப்பின் ஆசிய வலயமைப்பின் பிரதிநிதி டெமாசோ மெக்வல்ட்ஸ் ஆகியோரும், 45 நாடுகளின் பிரதிநிதிகளும் 15 க்கும் மேற்பட்ட ஆசிய வலய தேர்தல் ஆணைக்குழுக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட உலகெங்கிலும் உள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தமது வலயத்தில் தேர்தல் மற்றும் ஜனநாயகம் குறித்து விரிவானதொரு கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு இப்பேரவை சிறந்ததோர் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், தேர்தல் தொடர்பில் பிராந்தியத்தின் விரிவான ஒன்றியமாக இதனைக் கருத முடியும். 

தெற்காசியாவில் இத்தகையதொரு மாநாடு நடைபெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கை தேர்தல் ஆணைக்குழு மற்றும் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலயமைப்பு ஆகியன இம்மாநாட்டுக்கான உபசரிப்பை வழங்கியுள்ளன. 

ஆசியாவில் தற்போது இருக்கும் ஜனநாயகத்தின் இயல்பு, வலயத்தில் பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய சவால்கள் மற்றும் தேர்தல் செயன்முறைகளை மிகவும் வெற்றிகரமாக அமைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய பல்வேறு சிறந்த நடைமுறைகள் குறித்து இம்மாநாட்டில் விரிவானதொரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மாநாடு இன்றும் நாளையும் இடம்பெறும். “டொனமூர் ஆணைக்குழு முறைமையிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு வரை” என்ற நூல் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55