திமுகவில் என்னை சேர்க்கவில்லை என்றால் நாடாளுமன்ற  தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என  அழகிரி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் அவசரஅவசரமாக தலைமைபதவியை கைப்பற்ற முயல்கின்றார் என அழகிரி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வேகமாக கட்சியை கைப்பற்ற முயல்கின்றார் எனவும் அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவில் என்னை சேர்த்துக்கொள்ளவேண்டும் என நான் வேண்டுகோள் விடுப்பதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ள அழகிரி நான் அந்த கட்சிக்காக உழைத்துள்ளேன் மீண்டும் நான் அதில் இணைவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

என்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியடையும் எனவும் அழகிரி எச்சரித்துள்ளார்.