கிரிக்கெட் ஜாம்பவான் பிரட்மனின் பிறந்த தினமும் கூகுல் டூடுலும் 

Published By: Vishnu

27 Aug, 2018 | 04:01 PM
image

கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவானா டொன் பிரட்மனின் 110 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதை சிறப்பிக்கும் வகையில் கூகுல் டூடுல் சிறப்பு கௌரவமொன்றை வாழ்த்தாக வெளியிட்டுள்ளது. 

கடந்த 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி பிறந்த டொன் பிரட்மன், தனது 20 ஆவது வயதில் (1928.11.30) இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

பிரட்மன் சுமார் 20 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் ஒரு அசைக்கமுடியாத பாறையாகதத் திகழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தனது 92 ஆவது வயதில் காலமானார்.

20 ஆண்டுகள் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிய பிரட்மன், கிரிக்கெட் உலகில் பல்வேறு வீரர்கள் கனவிலும் நினைத்துக்கூடப்  பார்க்க முடியாத பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.

உதாணமாக இவர் கிரிக்கெட் உலகில் பிரவேசித்த இரு ஆண்டுகளிலேயே அதாவது 1930 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 131 ஓட்டங்களையும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது 254 ஓட்டங்களையும் பெற்றார்.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சுக்களை சிதறடித்த பிரட்மன், ஹேடிங்க்லியில் நடந்த அந்தப் போட்டியில் காலை உணவு இடைவேளைக்கு முன்னர் சதம் விளாசினார், தேநீர் இடைவேளைக்கு முன்னர் இரட்டைசதமும், அன்றைய நாள் போட்டி முடியும்போது 309 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது, எவருமே இதுவரை புரியாத வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

20 ஆண்டுகளில் வெறும் 50 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய பிரட்மன் 80 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 6,996 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் தனது துடுப்பாட்ட சராசரியை 99.96 ஆகவும் தடம் பதித்துச் சென்றுள்ளார்.

பிரட்மன் தனது சராசரியை 100 ஆக மாற்றியிருக்கலாம், ஆனால் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி பிரட்மனின் இறுதிப் போட்டியாக இருந்தது. 

இந்தப் போட்டியில் விளையாடும் முன்னரே பிரட்மன் தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப் போட்டியில் நான்கு ஓட்டங்களை விளாசினால் டெஸ்ட் கிரிக்கெட் சராசரியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை புரிய பிரட்மகுக்கு வாய்ப்புக்கிட்டியது.

எனினும் அந்த வாய்ப்பினை இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் எரிக் ஹோலிஸ் தகர்த்தெறிந்தார். அதாவது எரிக் ஹோலிஸின் பந்தில் நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொள்ளாது ஆட்டமிழந்து வெளியேறிய பிரட்மன், தனது ரசிகர்களின் கனவையும் தனது கனவையும் கலைத்தார். 

அத்துடன் 1932 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற ஆஷஸ் கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணி பிரட்மனை ஆட்டமிழக்கச் செய்ய பொடி லைன் (BodyLine) என்ற வியூகத்தை வகுத்தது. இருப்பினும் அதைக்கண்டு அஞ்சாத பிரட்மன் தனது துடுப்பாட்ட மட்டையின் மூலம் அந்த வியூகத்தை தவிடுபொடியாக்கினார்.

50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரட்மேன், 12 இரட்டைச் சதங்களையும் 29 சதங்களையும் 13 அரைசதங்களையும் விளாசியுள்ளார். பிரட்மனின் கிரிக்கெட் மகத்துவம் மிக்க சாதனையை இதுவரை எந்தவொரு வீரரும் நெருங்கியது கூட கிடையாது. 

இந்நிலையில் தன்னிகரில்லா சாதனையை புரிந்துள்ள கிரிக்கெட்டின் ஜம்பவானான டொன் பிரட்மனின் 110 ஆவது பிறந்த தினம் இன்று உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களினால் கொண்டாடப்படுகின்ற நிலையில் அவரை கெளரவிக்கும் முகமாக கூகுள், பிரட்மன் பந்தை பதம் பார்ப்பது போல் டூடுல் வெளியிட்டு அவரை கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58