இந்தியாவின் உயர் விருதிற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்‌ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சுப்ரமணியம் சுவாமி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

அதன்படி, "பாரத ரத்னா" விருதிற்காகவே  மகிந்த ராஜபக்‌ஷவின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும்,  நெல்சன் மண்டேலாவிற்கு எந்த அடிப்படையில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ அதே அடிப்படைலேயே மகிந்தவிற்கும் அந்த விருதுக்கு பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டார்.