சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு

Published By: Digital Desk 4

27 Aug, 2018 | 01:35 PM
image

மன்னார் 'சதோச' வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமையுடன் 58 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை பகலுடன் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு சுமார்  440 ற்கும் மேற்ப்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அப்புறப்படுத்தப்படும் மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலேயே சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.

இந்நிலையில் கடந்த ஒரு சில நட்களாக வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் என்பதால் குறித்த வளாகத்தின் முன் பகுதியானது முழுவதும் தார்ப்பால் இட்டு மூடப்பட்டுள்ளது.

தற்போது வளாகத்தின் மைய பகுதியில் உள்ள மனித எச்சங்களே மீட்க்கப்பட்டு வருகின்றது.

மழை பெய்யும் பட்சத்தில் குறித்த வளாகமானது முழுமையாக மூடப்படும்  நிலை ஏற்படும் என தெரியவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06