மகாவலி அதிகாரசபை எதிர்ப்பு பேரணிக்கு மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவை அழைப்பு 

Published By: Digital Desk 4

27 Aug, 2018 | 11:00 AM
image

தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் திட்டமிட்டு ஆழும் வர்க்கத்தினால் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாவலி 'எல்' வலயம் ஊடாக முல்லைத்தீவு நகர மக்களின் காணிகள் அபகரிப்பதை தடுத்து நிறுத்த கோரியும் தமிழ் மக்களின் கிராமிய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஊடாக தமிழர் வாழ்விடத்தினை பாதுகாக்கும் நோக்கில் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பினை  முல்லைத்தீவில் நிறுவியுள்ளார்கள்.

இது தொடர்பில் மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களான ஆம்ஸ்ரோங் அடிகளார் வைத்தியர் க.சுதர்சன்,வி.நவநீதன் ஆகியோர் 26 ஆம் திகதியன்று முல்லைத்தீவில் ஊடக சந்திப்பொன்றினை நடத்தியுள்ளார்கள்.

இதில் மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

தமிழர்களின் பூர்வீக நிலங்களும் வாழ்வாதார நிலங்களும் சிங்கள குடியேற்றத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது வெலிஓயா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் காரணமாக ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் முல்லைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல கொக்குளாயில் இருக்கின்ற விகாரை நாயாற்று பகுதியில் அமைக்க எத்தனிக்கப்படுகின்ற விகாரைகள் ஊடாக தமிழர்களின் வராலாறுகள் தி;ட்டமிடப்பட்டு திரிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றத்தின் கருவியாகவே மகாவலி பயன்படுத்தப்படுகின்றது.

வடமாகாணத்தில் மகாவலி என்பது காணிகளை அபகரித்துக்கொள்வதற்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தும் கருவியாக காணப்படுவதால் அது தமிழர்களுக்கு இதுவரை எந்த பயனையும் பெற்றுத்தாரத காரணத்தால் அது ஆக்கிரமிப்பின் குறியீடாக காணப்படுவதால் வடமாகணத்தில் மகாவலியினை முற்றாக நிராகரிக்கின்றோம்.

எங்கள் கோரிக்கையாக வடமாகாணத்தில் உடனடியாக மகாவலியின் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் அண்மையில் உள்ள நடைமுறைகளை மீறி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேச சபையினை மீறி செயற்பட்டு வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.

திட்மிட்ட ரீதியில் தொல்லியல் திணைக்களம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற வரலாற்று திரிப்பு நடவடிக்கை காணி அபகரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தவேண்டும்

மகாவலி எல் வலயத்திற்கு அப்பால் திட்டமிடப்படுகின்ற கே, ஜே வலயங்களின் ஊடாக வடமாகாணத்தின் இதயபூமிகளை துண்டாடி வடமாகாணத்தின் சனத்தொகையினை மாற்றி அமைத்து இனப்பரம்பலை மாற்றி அதன் ஊடாக தமிழர்களின் அரசியல் பலத்தினை சிதைக்க நினைக்கின்ற இந்த திட்டத்தை உடனே நிறுத்தவேண்டும்.

மகாவலி திட்டத்தின் ஊடாக அபகரிக்கப்படுகின்ற காணிகளின் அதிகாரங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசையிடம் இருக்கும் வரை தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்வு என்பது உப்பு சப்பற்றதாக இருக்கும். 

என்ற அடிப்படையில் இந்த காணி அதிகாரங்களை மகாவலியிடம் விட்டுக்கொடுத்து விட்டு அரசோடு இனப்பிரச்சனை தொடர்பில் பேசுவதில் எந்த பயனும் இல்லை என்ற அடிப்படையில்  தமிழ் தலைமைகள் இந்த விடயத்தில் ஒன்று பட்டு உழைக்கவேண்டும் என்று பேர் அழைப்பினையும் விட்டு எதிர்வரும் நாளை முல்லைத்தீவு நகரில் அமைதிவளியில் ஒரு பேரணியினை நடத்த இருக்கின்றோம் அந்த பேரணிக்கு அரசியல் கட்சி இனமத பேதங்களை கடந்து அனைத்து தமிழ்தேசிய ஆர்வலர்களும் ஒன்று திரளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58