என்னைத் தடுக்க எவருக்கும் உரிமையில்லை ; மாற்றுத் தலைமையின் கீழ் கிரிக்கெட்டை முன்னேற்றுவேன் -அர்ஜுன

Published By: Vishnu

27 Aug, 2018 | 10:03 AM
image

நாட்டில் மாற்று அர­சியல் தலை­மைத்­து­வத்தின் கீழ் கிரிக்கெட் துறை­யை நான் முன்­னேற்­றிக் ­காட்­டுவேன். கிரிகெட் துறைக்கு என்னை மீண்டும் வர வேண்டாம் என்று  கூற எவ­ருக்கும்  உரிமை கிடை­யாது  என்று முன்னாள் இலங்கை கிரிக்கெட்  அணித் தலைவரும் அமைச்சருமான அர்­ஜுன ரண­துங்க  தெரி­வித்தார். 

பண்­டா­ர­நா­யக ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்பெற்ற நூல் வெளி­யீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார்.

இந் நிகழ்வில்  அமைச்சர்  மேலும்  குறிப்­பி­டு­கையில், 

கிரிக்கெட் பற்றி தற்­போது நான் கருத்­துகள் தெரி­விப்­ப­தில்லை. காரணம் தற்­போ­தைய   விளை­யாட்­டுத்­ துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா இத்­துறை பற்றி நன்கு அறிந்­தவர். சட்ட திட்­டங்கள் தொடர்­பிலும் நன்கு அறிந்­தவர்.  எனவே அந்தப் பொறுப்பை அவ­ருக்கு அளித்­து­விட்டு நான் அமை­தி­யாக இருக்­கின்றேன். 

 எனினும்  தற்­போது  கிரிக்கெட் துறையில் நிலவு­கின்ற   குறைபாடு­களை   நிவர்த்தி செய்­வ­தற்­கா­கவும்,  கிரிக்கெட் துறையை  மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் எதிர்­கா­லங்­களில்  நான் எனது ஒத்­து­ழைப்­பை வழங்­குவேன். எனக்கு அதற்­கான பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. வேறு ஓர் அர­சியல் தலை­மைத்­துவம் இந்தக் கோரிக்­கையை என்­னிடம் முன்­வைத்­தாலும் அதனைச் செய்வேன். 

தேசிய அர­சாங்­கத்தில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பத­வி­யை நான் ஒரு போதும் ஏற்­று­க்­கொள்­ளப் ­போ­வ­தில்லை என முன்­னரே தெளி­வாக குறிப்­பிட்­டுள்ளேன். எனினும் வேறு அர­சியல் தலை­வர்கள் யாரேனும் மீண்டும் கிரிக்கெட் துறையைப் பொறுப்­பேற்று அதனை சீர்­ப­டுத்தித் தரு­மாறு கோரினால், அந்தப் பொறுப்பை ஏற்று 6 மாதங்களுக்குள் அதனைச் செய்து முடிப்­ப­தற்கு நான் தயா­ரா­க­வுள்ளேன். இதனை நான் ஆசைக்­காக செய்­வ­தாகக் கூற­வில்லை. அதேவேளை என்னால் மீண்டும் கிரி­க்கெட்­டுக்குள் வர முடி­யாது என யாராலும் கூற முடி­யாது. ஏனெனில் என்­னை­விட கிரிக்­கெட்டில் யாருக்கும் அதிக உரிமை கிடை­யாது. 

தற்­போது கிரிக்கெட் துறையில்  வீரர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­ப­டு­வ­தில்லை. அர­சி­யல் வா­தி­களின் தலை­யீட்டின் கார­ண­மாக இன்று கிரிக்கட் துறை சீர­ழிந்­துள்­ளது என்­பதை கவ­லை­யுடன் தெரி­விக்­கின்றேன். விளை­யாட்­டுத்­ துறை அமைச்­சர்­களும் இதற்கு துணை போகின்றனர். 

இதுவே கிரிக்கட் துறை சீரழிவுக்கான பிரதான காரணமாக காணப்படுகின்றது. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு மக்கள் அடுத்த தேர்தலில் தகுந்த பதிலை வழங்குவார்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41