அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபரமாக உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

சிகாகோ மாநிலத்தின் லிட்டில் வில்லேஜ் பகுதியிலுள்ள அடிக்குமாடி குடியிருப்பொன்றிலேயே நேற்று அதிகாலை இந்த தீ விபத்து இடம்பெற்றது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து தவந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இருப்பினும் இந்த விபத்தின் போது அடுக்குமாடிக் கட்டடத்தில் குடியிருந்த 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.