86 மில்­லியன் ரூபா செலவில் கதி­ரை­களை இறக்­கு­மதி செய்யும் மேல் மாகாண சபை

Published By: Vishnu

27 Aug, 2018 | 09:04 AM
image

மேல் மாகாண சபை­யா­னது  கடும் எதிர்ப்­புக்கு மத்­தியில் தனது உறுப்­பி­னர்­க­ளுக்­காக  ஆடம்­பரக் கதி­ரை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­காக 86 மில்­லியன்  ரூபாவை செலவிட்டுள்ளது. 

ஒரு   பெல்­ஜிய விநி­யோ­கஸ்­த­ரி­ட­மி­ருந்து  ஒவ்­வொன்றும் தலா 640,000  ரூபா பெறு­ம­தி­யு­டைய 135 கதி­ரை­களை  இறக்­கு­மதி செய்­வ­தற்கு ஆணை­யொன்று பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி சபையின் தலைமைச் செய­லாளர்  பிரதீப் யஸ­ரத்ன  கூறினார்.

மேல் மாகாண சபையில் 104  உறுப்­பி­னர்­களே உள்ள நிலையில் கதி­ரைகள்  தேவைப்­பாட்­டிலும் அதி­க­ளவில் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அந்தக் கதி­ரை­யொன்றின் உண்­மை­யான விலை 200,000  ரூபா­வாக  மட்­டுமே உள்ள நிலையில் சுங்க வரி,   கப்பல் போக்­கு­வ­ரத்­துக்­கான செலவு,  பெறு­மதி கூட்­டப்­பட்ட வரிகள் என்­பன கார­ண­மா­கவே  அவற்­றுக்கு அதிக விலையைச்  செலுத்த நேரி­டு­வ­தாக  யஸ­ரத்ன கூறினார்.

அந்தக் கதி­ரைகள் கொண்­டுள்ள அம்­சங்கள் மற்றும் தேவைப்­படும் மாற்­றங்கள் என்­பன குறித்து மேல் மாகாண சபை மதிப்­பீ­டொன்றை மேற்­கொண்­டி­ருந்­த­தாக  அவர் மேலும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் பயன்­ப­டுத்­தப்­படும்  கதி­ரை­க­ளை­யொத்த மேற்­படி கதி­ரை­களை 360 பாகைக்குத் திருப்­பவும் நகர்த்­தவும் முடியும் எனவும்  அவை  தேவைக்­கேற்ப சீர்­செய்­யக்­ கூ­டி­யவை எனவும்  கூறப்­ப­டு­கி­றது.

இது தொடர்பில்  மக்கள் விடு­தலை முன்­னணி மாகாண சபை உறுப்­பினர் சுனில் வட்­ட­கல தெரி­விக்­கையில்,  அந்தச் சபையின் 8  உறுப்­பி­னர்கள் மட்­டுமே  மேற்­படி தீர்­மா­னத்­துக்கு எதிர்ப்புத் தெரி­வித்து  உள்­நாட்டில்   கொள்­வ­னவை மேற்­கொள்ள யோச­னையை முன்வைத்­தி­ருந்­த­தாகக் கூறினார்.

மேல் மாகாண  ஆளுநர் ஹேமகு­மார நாண­யக்­கார  மேற்­படி தீர்­மானம் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக முன்னர் தெரி­வித்­தி­ருந்த நிலையில்,  சபை­யா­னது புதிய கதி­ரை­களைக் கொள்­வ­னவு செய்யும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு  முன்­னெ­டுக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

புதிய மாகாண சபைக்  கட்டடமானது 4 பில்லியன் ரூபா செலவில் கடந்த  மாதமே திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58