மன்னார் மாவட்ட மாட்டு வண்டி  சங்கத்தின் அனுசரனையுடன்  உமநகரி கிராம மக்களின் ஏற்பாட்டில் வடமாகாண ரீதியிலான மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட உமநகரியில் இடம் பெற்றது.

வடமாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் 4 மாவட்டங்களை சேர்ந்த 34 சோடி காளைகள் போட்டியில் ஈடுபட்டிருந்தன.

இதன் போது ஏ.பி.சி.டி என நான்கு பிரிவுகளாக போட்டிகள் இடம் பெற்றது.

ஏ(A) .பிரிவில் முதல் இடத்தை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் பெற்றுக்கொண்டது.

அதனைத்தொடர்ந்து  பி(B) ,சி(C), டி (D) ஆகிய மூன்று பிரிவகளிலும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் முதல் இடத்தை பெற்றுக்கொண்டது.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை மன்னார் மாவட்ட மாட்டு வண்டி  சங்கத்தினர் உமநகரி கிராம மக்களுடன் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.