(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

கராட்டிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அகிரோ லொகுகளுகே தனது முதல் போட்டியில் ஜப்பான் வீரரை எதிர்த்தாடினார். 

இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய அவர், 2-6 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். ஆனாலும் காலிறுதியில் கஸகஸ்தான் வீரருக்கு ஈடுகொடுக்க முடியாமல் தினறிய அகிலோ 10-0 புள்ளிகள் அடிப்படையில் வீழ்ந்தார்.

ஆனாலும் அகிரோவிற்கு மேலும் ஒரு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. மறுபிரவேசப் போட்டியில் (Repechage Contest) அகிரோ லொகுகளுகே ஐக்கிய அரபு வீரரை எதிர்கொண்டார். இந்தப் போட்டியிலும் கடும் போராட்டத்திற்கு பின் இலங்கை வீரர் அகிரோ 5-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியை சந்தித்து போட்டியிலிருந்து வெளியேறினார்.