மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களுக்கான 200 மில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்பிலான உதவியை இரத்து செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் வழிகாட்டலின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இப் பணமானது வேறு எங்கேனும் அதிக முன்னுரிமை தேவைப்படும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.