கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடுவீதியில் : மஹிந்த

Published By: Robert

06 Mar, 2016 | 04:38 PM
image

கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடுவீதியில் விடப்பட்டுள்ளனர். 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று தொழிலாளர்களை கண்டுகொள்வதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அட்டன் - வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் இன்று ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

எனது ஆட்சியின்போது மலையக மக்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்களை நான் முன்னெடுத்தேன். வீதி அமைப்பு, பாடசாலை அமைப்பு என உட்கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்பட்டன. இவ்வளவு செய்தும் மக்கள் மத்தியில் போலிக் கதைகளை கட்டவிழ்த்துவிட்டு சதிகாரர்கள் அவர்களை திசை திருப்பிவிட்டனர்.

மலையக மக்கள் கடவுளின் மக்களென சிங்கள கவிஞர் ஒருவர் கவிபாடியுள்ளார். ஆன்மீக வழிபாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இறைவழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதன் ஊடாக மேற்படி கூற்று உறுதியாகின்றது.

எனது ஆட்சியின்போது தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தேன். ஆனால், இன்று என்ன நடக்கின்றது. 1000 ரூபா தரப்படும் என்றனர். 2500 ரூபா வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவித்தனர். இவை நடந்துள்ளனவா?

மலையக இளைஞர்களுக்கு கொழும்புக்கு செல்லமுடியாத நிலை காணப்பட்டது. பாதுகாப்பு கெடுபிடிகள் உச்சமட்டத்தில் இருந்தன. ஆனால், போரை முடித்து வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதி மக்களுக்கும் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். வடக்கு,கிழக்கிலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தோம்.

ஆனால் அவர்களின் இதயங்களை வென்றெடுக்கமுடியவில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேயிலைக்கு சரியான விலை கிடைப்பதும் இல்லை, தொழிலாளர்களுக்கு சம்பளமும் கிடைப்பது இல்லை, பொய் சொல்லி வாக்குகளை பெற்ற அரசாங்கம் உங்களை கவனிப்பதும் இல்லை என தமிழில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47