பொக­வந்­த­லாவையில், தாயை தாக்­கிய 11வயது மக­ன்: அதிர வைக்கும் காரணம்

Published By: J.G.Stephan

26 Aug, 2018 | 12:41 PM
image

பொக­வந்­த­லாவை செல்­வ­கந்த தோட்­டப்­ப­கு­தியில் தனது தாயைக் கல்லால் தாக்­கிய 11வயது சிறு­வ­னுக்கு பொக­வந்­த­லாவை நீதி­மன்றம் பிணை வழங்­கி­யுள்­ளது.

தனது தாய் தனக்கு மிளகாய்த் தூளை வீசியதால் கோப­முற்றே தான் கல்லை விட்­டெ­றிந்­த­தாக மகன் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ளான்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில்,தாக்­கு­தலில் தலையில் காயங்­க­ளுக்­குள்­ளான தாய் பொக­வந்­த­லாவை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கிறார்.

சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
குறித்த சிறுவன் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை வில­கி­யுள்ள நிலையில் அயல் வீடு­களில் வேலை செய்து தனது தாய்க்கும் தங்­கைக்கும் ஆத­ர­வாக இருந்­துள்ளான்.

தந்தை தலை­ந­கரில் பணி புரி­வ­தா­கவும் அவ்­வப்­போது வீடு வந்து செல்­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் சிறு­வ­னது தாயின் வலது கை பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் அவரால் பணி­பு­ரிய முடி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் சம்­பவ தின­மன்று மகன் வேலைக்கு செல்­ல­வில்லை எனவும் தனது பசிக்கு ஏதா­வது உணவு வழங்­கு­மாறு தாயிடம் கேட்­டுள்ளான்.

இந்­நி­லையில் உணவு சமைக்க வீட்டில் எது­வு­மில்லை எனத் தாய் கூறவே, தாய்க்கும் மக­னுக்­கு­மி­டையில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து தாய் மிளகாய்த் தூளை வீசி எறிந்­துள்ளார். இதனால் கோப­முற்ற மகன் கல்லை எடுத்து எறிந்­ததால் தாய் காய­முற்­றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01