இந்தியாவின் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலுள்ள குடகு மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 20 பேர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக கேரளாவிலும் கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்தது. கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய மழை கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள குடகு, உடுப்பி, மைசூர் மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் புதைந்தன. அதில் வசித்த மக்கள் மண்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

மண்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள். நேற்று மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் குடகு மாவட்டத்தில் வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார்.